தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்ட முகாம் பாதிரி ஊராட்சியில் 21.12.2020 முதல் 28.12.2020ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் மூலம், கிராம அடிப்படை தகவல், கைவினைஞர்கள், விவசாயம், கால்நடைகள், கோழி வளர்ப்பு சேவை தொழில்கள், பாரம்பரியமான தொழில்கள், நீர்நிலைகள், இயற்கை வளங்கள், சொந்த தொழில் செய்வோர், சந்தை வாய்ப்புகள் போன்ற தகவல்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதில் மகளிர் குழுக்கள், தொழில் முனைவோர் இளைஞர்கள் ஆகிய பல்வேறு குழுக்களும் இலக்கு நோக்கிய கலந்தாய்வு செய்யப்பட்டு, முதல் நிலை தகவல்கள் பெறப்பட்டு, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை முகாம் பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை மற்றும் கிராம ஊராட்சியிடம் பெறப்பட்ட அனைத்து தகவல்களும் மக்கள் பங்கேற்புடன் கூடிய கிராம வளர்ச்சி திட்டம் கைபேசி செயலியில் பதிவு செய்யப்படவுள்ளது.
-
வெ. அரிகிருஷ்ணன்
ஊராட்சி மன்றத்தலைவர்,
பாதிரி கிராமம்.
9962233814