அருள்மிகு கோதையம்மன் திருக்கோவில் திருப்பணிகள் | நன்கொடை

 



அருள்மிகு கோதையம்மன் திருக்கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

கீழ்காணும் திருப்பணிகளுக்காக நன்கொடைகள், பொருளுதவி தரலாம்..



1. கோவில் சுற்றுப்புறங்கள் மற்றும் பாதையை தூய்மைப்படுத்துதல்
2. கோவில் மேற்கூரை அமைத்தல்
3. அணையா அடுப்பு ஏற்றப்பட்டு, அன்னதான சேவை மூன்று வேளையும் அளிக்கப்பட உள்ளது
4. தினமும், கோவிலில் இரண்டு வேளையும் வழிபாடு நடக்க உள்ளது
5. பவுர்ணமி மற்றும் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது
6. தைப்பூசத்தன்று தெப்ப தேரோட்டம் நடைபெற உள்ளது. (மழைக்கு நன்றி கடனாக.. மக்களோடு மக்களாக.. நீரில் மிதந்தபடி அம்மன் அருள்)
7. ஆடி மாதத்தில் மூன்றாம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை என 3 நாள் விழா நடைபெற உள்ளது.


அணையா அடுப்பு - அன்னதானம்

கிராமத்தை காப்பதும், மக்கள் நலமுற்று வாழ்வதுமானதே கோதையம்மன் அருளாகும். அந்த வகையில் பாதிரி கிராமத்தில் பசி பிணி போக்கி காக்கும் தெய்வமான கோதையம்மன் அருளானது அனைவருக்கும் கிடைக்க அணையா அடுப்பு அன்னதானம் சேவை தொடங்கப்படுகிறது. 

பக்தர்கள், தங்களால் இயன்ற நன்கொடைகளை பணமாக மட்டுமன்றி, அரிசி, மளிகை பொருட்களாகவோ, விறகு, சாமானாகவோ, பரிமாறுதல் மூலமாக கூட சேவையாற்றலாம்.

மேற்படி, தகவல்களுக்கு... 9962233814 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.