பாதிரி கிராமத்தில், ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள்!

 பாதிரி கிராமத்தில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு ஆகிறது. திரு. வெ. அரிகிருஷ்ணன் தலைவராக கடந்த ஓராண்டில் செய்த பணிகள் பின்வருமாறு..



1. தட்டுப்பாடு இல்லாமல் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

2. அனைத்து தெருக்களிலும், தடையின்றி மின்விளக்குகள் எரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

3. நிரந்தரமான சுடுகாடு பாதைக்கு பிளான் அப்ரூவல் பெறப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பாதை சீரமைக்கப்பட உள்ளது

4. நூறுநாள் வேலை திட்டத்தில் 22 பயனாளிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

5. 5 பயனாளிகளுக்கு ஆட்டு கொட்டகை அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

6. 2 தெருக்களில் சிமெண்ட் சாலை புதிதாக அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

7. 13 பேருக்கு குடும்ப அட்டை புதிதாக பெற்று தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

8. குறைவான வோல்டேஜ் பிரச்னைக்கு தீர்வாக, அனைத்து கம்பங்களிலும் மின்சார கம்பிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது

9. 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது

10. குளம் தூர்வாரப்பட்டு, படிகள் கட்டப்பட்டது

11. முதன்முறையாக விவசாயிகள் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டது

12. மகளிர் குழுக்கள் ஒழுங்குசெய்யப்பட்டு, முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - கடன் பெற்று தரப்பட்டது - புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டது

13. தண்ணீர் தேவைகளுக்காக 5 இடங்களில் கை பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது

14. பராமரிக்க முடியாமல் இருந்த ஏழைகளின் குடியிருப்புகளுக்கு தொண்டு அமைப்புகள் மூலம் தார்பாய் வழங்கப்பட்டது

15. இருளர் குடியிருப்பு பகுதியில், காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது - மேலும் அந்த பகுதியில் மருத்துவ உதவிகள் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது

16. குளக்கரைக்கு செல்லும் பாதையை சீர்செய்து மண் கொட்டி ஒழுங்குப்படுத்தப்பட்டது

17. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்வழி பாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

18. கொரோனா காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும், தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது - நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்பட்டது

19. செயல்படாமல் இருந்த நூலகம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது

20. பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால், கல்வி பாதிக்காமல் இருக்க மாலை நேரங்களில் இளைஞர்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது -

21. கிராம மேம்பாட்டிற்காக, பொதுமக்களை அங்கமாக கொண்ட கல்விக்குழு, வளர்ச்சி குழு, விவசாய குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவ்வபோது ஆலோசனை பெறப்படுகிறது

22. வந்தவாசியில் இருந்து ஊர் நுழைவு பகுதியான சித்தேரி (பி ஏரி) பகுதியில், கழிவுகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

23. கிராம நிர்வாக அலுவலர் கிராமத்திற்கு வந்து அலுவல்கள் பணிகளை மேற்கொள்ள தனி இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

24. இளைஞர்களுக்கான விளையாட்டு, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது

25. கிராமத்தில் பயன்பாடற்று கிடந்த பகுதியை தேர்வு செய்து பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

26. குறைகளை, கோரிக்கைகளை தெரிவிக்க பொதுமக்கள் எந்நேரமும் அணுகும் வகையில் ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது

27. நோய் வராமல் தடுக்க, மாதந்தோறும், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறது.. கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.. 2 வாரத்திற்கு ஒருமுறை அனைத்து பகுதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் போடப்படுகிறது

28. கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக, பிறநோய்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

29. ஊரடங்கு காலக்கட்டத்தில், கால்நடைகளும் நோய்வாய்படாமல் இருக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, கோமாரி தடுப்பூசி போடப்பட்டது

30. கொரோனா தீவிரமாக பரவிய காலத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க், கபசுர குடிநீர், சத்து மருந்துகள் வழங்கப்பட்டது

31. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் பொருளாதார நிலையை அறிந்து, அவர்களிடம் எந்த நிதியும் பெறாமல், கோவில் திருவிழாக்கள் உரிய சம்பிரதாயப்படி நடத்தப்பட்டது

32. அனைத்து வழிபாட்டு தலங்களிலும், மின்விளக்குகள் பொருத்தப்பட்டது

33. கிராமத்தில் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது

34. அனைத்து தெருக்களிலும், பெயர் பலகை வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது

35. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிராம பொது சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

36. கிராமத்தில் பசுமை காத்திட தன்னார்வலர்கள் உதவியுடன் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன

37. உடனுக்குடன் தகவல்களை அறியவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது

38. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் மத்திய அரசின் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது

39. கிராம பகுதியில் வாரச் சந்தை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது

40. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளுக்கு காலனி என்ற பெயரை நீக்கி பொதுவான பெயர் வைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டு, ஒப்புதலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.





Previous Post Next Post