அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு தற்போது நமது கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
கணக்கெடுப்பில் சேர்க்க தகுதியுடையவர்கள்...
1.கூரை வீடு
2.சீட் வீடு
3.ஓட்டு வீடு
4.முழுவதுமாக சேதமடைந்த வீடு (மாடி வீடும் இருக்கலாம்)
5. வேறு திட்டத்தில் பெயர் சேர்க்கப்பட்டுஇருந்தால் இக்கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டியதில்லை.
6.புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களையும் கணக்கெடுப்பில் சேர்க்கப்படும். (குறிப்பு: சொந்த இடம் இருந்து புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு கணக்கெடுப்பில் சேர்க்கப்படாது.)
7.சொந்த இடம் இருந்து வாடகை வீட்டில் வசிப்பவர்களும் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவர் (ஆவணங்கள் அனைத்தும் பாதிரி முகவரியில் இருக்க வேண்டும்)
8. சொந்த இடமும் இல்லை வாடகை வீட்டில் வசித்து வருபவர்களும் கணக்கெடுப்பில் சேர்க்கபடுவர்.(ஆவணங்கள் அனைத்தும் பாதிரி முகவரியில் இருக்க வேண்டும்)
9.அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் கிடையாது.
10.ஏற்கனவே அரசு வீடு பயன்பெற்றவர்களுக்கும் இத்திட்டம்கிடையாது
இது கணக்கெடுப்பு தான் உடனே வீடு வழங்கப்படும் என்று நினைக்கவேண்டாம். முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் வீடு வழங்கப்படும்.
தகுதியானவர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்...
ஆதார் அட்டை
குடும்ப அட்டை
வாக்காளர் அட்டை
இடம் ஆவணங்கள்
மின்சார அட்டை
ஆதார் குடும்ப அட்டையில் இணைத்த மொபைல் எண்
குடியிருக்கும் இடத்தில் பயனாளியை நிற்க வைத்து கணக்கெடுப்பு குழுவிடன் புகைப்படம் எடுக்கப்படும்.
கணக்கெடுப்பு குழு
1.ஊராட்சி மன்ற தலைவர்
2.கிராம நிர்வாக அலுவலர்
3.ஊராட்சி செயலர்
4.வார்டு உறுப்பினர்
5.PLF (மகளிர்குழு) உறுப்பினர்
26.01.2023 குடியரசு தின கிராம சபையில் ஒப்புதலுக்கு வைக்கப்படும். பட்டியல் அதற்கு முன்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்படும்.
-
தலைவர்
பாதிரி ஊராட்சி