தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
”இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சமத்துவ சமூகத்தில் இந்த முன்னெடுப்பு வரவேற்புக்குரியது.
நமது பாதிரி கிராமத்தில் கடந்த 2020 ல் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றிருந்த திரு அரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளுக்கு காலனி என்ற பெயரை நீக்கி பொதுவான பெயர் வைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டு, ஒப்புதலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதுமட்டுமல்லாது, கிராம சபை கூட்டங்களில் முறையான தீர்மானங்களை இயற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
என்னதான், அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் முயற்சிகள் மேற்கொண்டாலும்,
பொதுமக்கள் இத்தகைய முயற்சிகளுக்கு முழு மனதோடு ஒத்துழைத்தால்தான் சமூக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய இயலும். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரே காலனி என்ற சொல்லை நீக்கிட முன்வந்து அறிவித்திருப்பது, பாதிரி கிராம ஊராட்சி சார்பில் வரவேற்கப்படுவதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெ. அரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.