காசநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்கு உதவிகரம் நீட்டிய ஊராட்சி மன்ற தலைவர்

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் 11 வயது சிறுவன் காசநோயால் அவதிபட்டு வந்துள்ளார். அவரது கால் தொடை எலும்பும் பாதிக்கப்பட்டு உடைந்த நிலையில் இருந்துள்ளது.

நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், சிறுவனின் குடும்பத்தார் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதையறிந்த பாதிரி ஊராட்சி மன்ற தலைவர் வெ. அரிகிருஷ்ணன், அரசு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களை உடனடியாக, ஊராட்சி தலைவர் மூலம் மருத்துவ அதிகாரிகள் சந்தித்து சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடனே, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை நல மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிகிச்சை முடியும் வரை குடும்பத்திற்கான நிதி ஆதாரத்திற்கு உதவ ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சுமார் 6 மாத காலம் கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை முடிந்து தற்போது, காசநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சிறுவன் அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சத்தான உணவு வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடக்க முடியாமல் ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் தற்போது நன்கு நடமாடக்கூடிய நிலைக்கு மாறிவிட்டதோடு, காசநோயிலிருந்து முழுவதும் குணமடைந்துள்ளார்.
சிறுவன் உயிர் பிழைக்க உதவிய அனைத்து மருத்துவர்கள், மாவட்ட நிர்வாகம், மாவட்ட காச நோய் மையம், அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் என அனைவருக்கும் பாராட்டுகள்...




Previous Post Next Post