அருள்மிகு #கோதையம்மன் கோவில் வழிபாட்டுக்காக திறப்பு!

 அருள்மிகு #கோதையம்மன் கோவில் வழிபாட்டுக்காக திறப்பு!

வந்தவாசி அடுத்த #பாதிரி கிராமத்தில், கிராம தேவதையான கோதையம்மனுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத பாரம்பரிய திருவிழா இந்தாண்டு நடத்தாமல் இருந்ததால், ஊர்பொதுமக்கள் பெரும்பாலோனோரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று அம்மன் கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக முழுவதும் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள அதேசமயம், விதிகளுக்குட்பட்டு கிராம கோவில்களை திறக்க அனுமதி வழங்கியிருப்பதால், ஊராட்சி மன்ற தலைவர் திரு. வெ. அரிகிருஷ்ணன் ஒப்புதலுடன், தகுந்த நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன், பொதுமக்கள் அம்மனை தரிசித்து, நாட்டு மக்களை நோய்நொடியில்லாமல் காத்திட வேண்டிக்கொண்டனர்.
கோவில் வளாகத்தில் ஊர்மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்




Previous Post Next Post