பாதிரி ஊராட்சி மன்ற தலைவர் திரு. வெ. அரிகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ளார்.
-------------------------
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நண்பர்களுக்கு வணக்கம்.
எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், தற்போது சிகிச்சையில் உள்ளேன்.
முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும், எனக்கு தொற்று வந்துள்ளதென்றால், முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் வெளியில் நடமாடுபவர்கள் நிலை கேள்விக்குறிதான். எனவே அலட்சியம் காட்டாமல் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒத்துழையுங்கள்.
கடந்த ஒருவாரத்தில் என்னுடன் தொடர்புக்கொண்டவர்கள் தயவு கூர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். அறிகுறிகள் இருப்பின் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
கொரோனா நமக்கு வராமல் இருக்கவும், நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவும் முகக் கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
- வெ. அரிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர், பாதிரி கிராமம், வந்தவாசி