முக்கிய அறிவிப்பு
பாதிரி கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்கள் வீட்டிற்கான வீட்டுவரி, குடிநீர்கட்டணம் இரண்டையும் மார்ச் 30க்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும் கிராமத்தில் புதிய கட்டிடம் மற்றும் கடை கட்டுபவர்கள் ஊராட்சி மன்ற அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துகொள்ளப்படுகிறது.
மேலும் தங்களின் பட்டா நிலத்தை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. புறம்போக்கு நிலம், ஏரி, குளம், குட்டை, கால்வாய் பகுதிகளில் உள்ள மரங்களை யாராவது வெட்டினால் உடனடியாக ஊராட்சி மன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
வெ.அரிகிருஷ்ணன்,
ஊராட்சி மன்ற தலைவர், பாதிரி கிராமம்.