அருள்மிகு கோதையம்மன் திருக்கோவில் அறக்கட்டளை

 



அருள்மிகு கோதையம்மன் திருக்கோவில் அறக்கட்டளை - பாதிரி கிராமம், வந்தவாசி, சார்பில் அருள்மிகு கோதையம்மன் திருக்கோவில் புனரமைப்பு மற்றும் திருப்பணிகள் தொடர்பான நடவடிக்கைகள், 2021 மார்ச் மாதம் 1 முதல் தொடங்குகிறது. 

முதல் பணியாக அம்மன் திருப்பெயரால், மணிக்கொரு முறை இறைப்பாடல் உடன், நேரம் அறிவிக்கும் கருவி கோவிலில் பொருத்தப்பட்டுள்ளது.

காலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரை மணிக்கொரு முறை, நேரம் அறிவிக்கப்படும். அதனோடு, இறைப்பாடல் 3 நிமிடம் ஒலிக்கும்.

மெல்லிய ஆன்மிக இசை ஒலிப்பதன் மூலம், கிராமத்தில் இறை அருளும், நேர்மறை ஆற்றலும் பெருகும் என்ற நம்பிக்கையில், இறை பணியை தொடர்வோம்.

நேரம் அறிவிக்கும் கருவி மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை அறக்கட்டளைக்கு நன்கொடையளித்தோர், திரு . அரிகிருஷ்ணன் (ஊராட்சி மன்ற தலைவர்) குடும்பத்தார்.



Previous Post Next Post