காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02/10/2021- சனிக்கிழமை, காலை 11 மணியளவில்,பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர். வெ.அரிகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். பற்றாளர் திரு.அன்பழகன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர், சுகாதார துறை, சத்துணவு துறை,தோட்டக்கலைதுறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகளிர் குழுவினர், இளைஞர்மன்றதினர், பொதுமக்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் அரசின் திட்டங்கள், கிராம வளர்ச்சி குறித்து விவாதம் செய்யப்பட்டது. பாதிரி ஊராட்சியில் உள்ள மதுகடை மூட, சுடுகாட்டிற்கு சாலை வசதி, பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா, பிரதம மந்திரி வீடு பயனாளிகள் ஒப்புதல், பொது கழிப்பிடம், பொது இடங்களில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது அபராத கட்டணம் மற்றும் பகுதி நேர ரேசன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.