தெள்ளார் அருகே பழங்கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

தெள்ளார் பகுதியில், நல்லூரில் இருந்து பெரியகுப்பம் செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில் ஒரு பலகை சிற்பம் இருந்தது. அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அந்த சிற்பம் பல்லவர் கால அய்யனார் சிலை என்பது கண்டறிந்தனர். 




அந்த சிலையானது, சுமார் 3.5 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிற்பம் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 1200 ஆண்டு பழமையான இச்சிற்பம் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தே கிடப்பதால் வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து சிலையின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இவ்வூரில் பாதி உடைந்த நிலையில் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. இது பிற்கால விஜயநகர கலை பாணியில் அமைந்துள்ளது.
Previous Post Next Post