ஊராட்சி மன்றம் மூலம் பாதிரி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள்
1. நிரந்தரமான சுடுகாடு பாதை, பல்வேறு நிலக்கிழார்களின் நிலங்களை பெற்று அமைக்கப்பட்டது
2. புதிய அங்கன்வாடி மையம் (பால்வாடி) கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
3. பிள்ளையார் கோவில் தெருவிற்கு பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது.
4. குளக்கரை பகுதியில் புதிய நெற்களம் அமைக்கப்பட்டது.
5. பெருநகர் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து தெருகளுக்கும் தனித்தனி குழாய் அமைக்கப்பட்டது.
6. ராட்டின கிணறு ஒட்டிய பாதையில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது.
7. கோதையம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், நெற்களம் அருகில், மந்தைவெளி தெரு ஆகிய 4 இடங்களில் புதிய கைபம்புகள் அமைக்கப்பட்டது.
8. ஆட்டுக்கொட்டகை 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
9. பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை புனரமைப்பு செய்யப்பட்டது.
10. மகளிர் சுகாதார வளாகம் புனரமைக்கப்பட்டது.
11. 6-வது வார்டு மேல்நிலை நீர்த் தேக்கதொட்டி புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது
12. ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
13. பெருமாள் கோவில் தெருவில் சிறுபாலம் அமைக்கப்பட்டது
14. சுடுகாடு பாதையில் சிறுபாலம் அமைக்கப்பட்டது
15. தனிநபர் கழிவறை 21 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
16. மந்தைவெளி தெரு அருகே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
17. ஆடு வளர்ப்பு திட்டம் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டது.
18. பாதிரி ஊராட்சி ,அரவிந்த கண்மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை
முகாம் மூலம் 26 பேர் கண் அறுவை சிகிச்சை செய்து பயனடைந்தனர்.
19. உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
20. இலவச வீட்டுமனை வழங்கும் திட்டதின் மூலம் 33 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது
21. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டதின்கீழ் 16 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டது
22. கலைஞர் கனவு இல்லம் திட்டதின் கீழ் 9 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.
23. அனைத்து கோவில்களுக்கும் தண்ணீர் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
24. குளக்கரை அருகில் உள்ள குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்கப்பட்டது.
25. தனியார் நிறுவன உதவியுடன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.
26. மாதந்தோறும் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு மற்றும் பைப்லைன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
27. சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
28. ஊராட்சி மன்ற பணிகள் தொடர்பாக வெளிப்படை தன்மையோடு அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு தகவல்கள் பகிரப்பட்டன.
29. பாதிரி கிராமத்தின் பிரதான சாலை மற்றும் பள்ளி வளாகம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
வளர்ச்சி திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படவுள்ள பணிகள்.
1. சுடுகாடு பாதைக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணி
2. 6வது வார்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிக்கு செல்லும் பாதையை ஜல்லி சாலையாக அமைக்கும் பணி
3. குளக்கரை அருகே உள்ள நெற்களத்திற்கு ஜல்லி சாலை அமைக்கும் பணி
4. விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள். வழங்கும் பணி
5. பிள்ளையார் கோவில் தெருவிற்கு கழிவுநீர் கால்வாய்
6. புதியதாக பெரிய நெற்களம், கிடங்கு வசதியுடன் அமைக்கபடவுள்ளது.
7. ஈஸ்வரன் கோவில் தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைக்கபடவுள்ளது.
8. கோதையம்மன் கோவில் தெரு மற்றும் பள்ள தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.