இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,47,639 வாக்காளர்கள் உள்ளனர். பாதிரி கிராமத்தில் மட்டும் 1287 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. அதற்காக கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி தற்போது தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2025-ம் தேதியை அடிப்படையாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் மட்டும் மொத்தம் 2,47,639 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள்: 121462 ; பெண்கள்: 126173; மூன்றாம் பாலினம்: 4 பேர் ஆகும்.
வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட பாதிரி கிராமத்தில், மொத்தம் 1287 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் 618, பெண்கள் 669 ஆகும்.
வாக்காளர் பட்டியல் முழு விவரம்: