பாதிரி கிராமம்: அரசு பள்ளிக்கு மேஜை, பிரிண்டர் வழங்கிய திருமலா பால் நிறுவனம்


வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு திருமலா பால் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மேஜை, பெஞ்ச், பிரிண்டர் ஆகியவை மாணவர்களின் பயன்பாட்டிற்காக தலைமைஆசிரியை எஸ்தரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சென்னையை சேர்ந்த ஹரிக்கேன் வெட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இதில் உதவி ஆசிரியர் முருகன், திருமலா பால் நிறுவனத்தின் அக்ரோ சர்வீஸ் தலைவர் எஸ்.ஜெயபால், ஜெனரல் மேனேஜர் அருள் பரமராஜன், மண்டல மேலாளர் கஜேந்திரன் மற்றும் மேலாளர் மணிகண்டன், பார்த்திபன், சதீஷ் பாபு, அக்ரி பழனிவேல் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை லாக்டாலிஸ் இந்தியா நிறுவனத்தின் பால் கொள்முதல் துறை இயக்குனர் கே.பாஸ்கர சேதுபதி ஒருங்கிணைத்தார்.

Previous Post Next Post