பாதிரி கிராமத்தில் மழை,வெள்ள போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை வட்டாட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டார். பாதிரி கீழ்காலனி பகுதி மற்றும் பழங்குடியினர் குடியிறுப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சி மன்றத்தலைவர் வெ.அரிகிருஷ்ணன், துணை வாட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.