வந்தவாசி பகுதி மக்களே! மழைகாலம் வந்தாச்சு... மின்சாரத்திடம் உஷாராக இருங்கள்!

மழைகாலம் தொடங்கியதால், மின்சாரம் சார்ந்த விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மின்சார துறை அறிவுரை வழங்கியுள்ளது.




அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், (திருவண்ணாமலை) மேற்பார்வை பொறியாளர் பூ காளிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.  

கடந்த ஒரு வார காலமாக நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இடி மற்றும் மின்னல் சற்று அதிகமாகவே உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் மின்மாற்றி அருகிலோ, மின் பாதைக்கு அருகிலோ செல்வது மற்றும் அவைகளை தொடுவது என்பது ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலாகும். 

மேலும் மின்கம்பத்தில், ஸ்டே கம்பியில் கால்நடைகளை கட்டுவதும், ஈரத் துணிகளை உணர்த்துவதும் கூடாது. 

சமீபத்தில் மின் பாதைக்கு கீழே தகர கொட்டாயில் அமைத்திருந்த கூரையின் மீது இயற்கைச் சீற்றத்தினால் மின் கம்பி அறுந்து விழுந்து, இரும்பு தூணில் கட்டியிருந்த மாடு மின்சாரம் தாக்கி இறந்தது. அது தெரியாமல் உரிமையாளர் மாட்டினை தட்டி எழுப்பியபோது அவரும் உயிரிழக்க நேரிட்டது. அதேபோல் வீட்டின் பின்புறம் ஈரத்துணி உணர்த்துவதற்காக கட்டியிருந்த கம்பியின் மீது சில்க் ஒயர் சுற்றி எடுத்துச்சென்று மின்விளக்கு அமைத்திருந்த வீட்டில், மழையின் போது துணிகளை எடுக்கச் சென்ற போது, சில்க் ஒயரின் மூலம் மின்சாரம் கசிந்து, துணி கம்பியில் பட்டு கொண்டிருந்ததை கவனிக்காமல் அதனை தொட்ட தாய் மற்றும் மகன் அந்த இடத்திலேயே இறந்து போயினர். 

ஆகவே பொதுமக்கள் மின்சார கட்டமைப்புகள் அருகில் செல்வது மற்றும் ஈரக் கையால் மின்சாதனங்களை இயக்குவது கூடாது. தரமான ஒயரிங் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் விபத்தினை தவிர்க்கலாம். 

பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை கண்டால் அதன் அருகில் செல்லாமலும் மற்றவர்களையும் அணுகவிடாமல், அருகிலுள்ள மின்சார அலுவலகத்திற்கு தகவல் அளித்திடவும், மின்மாற்றியிலோ, மின் இணைப்பு கம்பத்தில் பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் தாங்களாகவே அல்லது வெளிநபர்களை யோ கொண்டு பழுது நீக்க முயற்சிக்க கூடாது. அது பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். 

எனவே மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்புகொண்டு புகார் அளித்து உடனடியாக தீர்வு கண்டிட வும் இதன் மூலம் பொதுமக்களை கனிவுடன் வேண்டுகிறோம். 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 

Minnagam மின்னகம் :9498794987 

கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் பதிவு மையம் "1912" அல்லது 18004256912. 

வாட்ஸ்அப் எண்கள்:9445855768 9445850811 

போன் :04175-255325 044-28521109 044-28524422 


Previous Post Next Post