திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் விதமாக மாவட்டத்தில் 18 வட்டாரங்களுக்கும் துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களது தலைமையில் முன்னெச்சரிக்கை அறிவிப்புக் குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெறியேற்றக் குழு, நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மைக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர 4 நகராட்சிகளுக்கும் நகராட்சி ஆணையா்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை கவனித்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்.
எனவே, பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடா்பான சந்தேகங்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா எண் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 04175-232377 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இதுதவிர 24 மணி நேரமும் செயல்படும் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04175-252432 என்ற எண்ணிலும், செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகத்தை 04182-222235 என்ற எண்ணிலும், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தை 04173-290020 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
இதேபோல, அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருவண்ணாமலை (04175-252433), கீழ்பென்னாத்தூா் (04175-242055), தண்டராம்பட்டு (04175-242055), செங்கம் (04188-222226), கலசப்பாக்கம் (04181-241050), போளூா் (04181-222023), சேத்பட் (04181-252600), ஆரணி (04173-226998), செய்யாறு (04182-222233), வந்தவாசி (04183-225065), வெம்பாக்கம் (04182-247272), ஜமுனாமரத்தூா் (04181-245377) ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.